காணாமல் போன வாகனங்களைக் கண்டறிய ஐ.வி.எம்.எஸ். தொழில்நுட்பம்... வாகனத் திருடர்களுக்கு காவல்துறையின்"செக்"!
திருட்டுப் போன வாகனங்களைக் கண்டறிய ஐ.வி.எம்.எஸ். என்ற தொழில் நுட்பத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளதாக பெருநகரக் காவல்துறை கூறியுள்ளது.
திருடப்பட்ட வாகனங்கள் பற்றிய தகவல்களை இந்த புதிய அமைப்பில் பதிவேற்றி விட்டால், அது தானாக சி.சி.டி.வி. கேமராக்களை கண்காணித்து, திருடப்பட்ட வாகனம் எதாவது ஒரு சாலையில் சென்றால், அருகில் உள்ள போலீசாருக்கு வாட்ஸ்ஆப் மூலம் தகவல் அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பரங்கிமலையில் காணாமல் போன வாகனம் ஒன்றை பாரீசில் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், 2021 முதல் தற்போது வரை திருடு போன 3,200 வாகனங்களை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
Comments